Thursday, August 29, 2013

அதர்வாவின் ‘இரும்பு குதிரை’










பரதேசி படத்தில் வித்தியாசமான வேடத்தில் அனைவரையும் ரசிக்கவைத்த அதர்வா, இப்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘இரும்பு குதிரை’. எதிர்நீச்சல் படத்தில் நடித்த பிரியா ஆனந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் தற்பொழுது பாண்டிச்சேரியில் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகின்றது. யுவராஜ் போஸ் இந்தப் படத்தை இயக்கி வருகின்றார். பைக் ரேஸ் சூழலில் நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ஆக்‌ஷன் கலந்த படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறுகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.
அதர்வாவின் ‘முற்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘பரதேசி’ படங்களில் இசை அமைத்த ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திலும் இசையமைக்கின்றார். ‘7ஆம் அறிவு’ படத்தில் நடித்துப் புகழ் பெற்ற ஜானி இதில் வில்லனாகத் தோன்றுகிறார்.
மேலும், இப்படத்தில் கேமராமேனாக ‘பீட்சா’ கோபி அமர்நாத் பணியாற்றுகிறார்.

ஒரே பக்கம் சாயப்போவதில்லை - நயன்தாரா!








அஜீத்துடன் ஆரம்பம் படத்திற்கு கமிட்டானபோது, காதலில் தோல்வியுற்ற கன்னியாய் எந்நேரமும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார் நயன்தாரா. ஆனால், அதையடுத்து ராஜாராணி, அனாமிகா போன்ற படங்கள் கமிட்டானதையடுத்து, சினிமாவில் கிடைத்த வரவேற்பு நயன்தாராவிற்குள்ளிருந்த காதல் காயத்திற்கு மருந்திட்டு ஆற்றியது.
அதனால், சமீபகாலமாக புது உற்சாகத்துடன் காணப்படும் நயன்தாராவின் உடம்பிலும், முகத்திலும் புதுப்பொலிவு பளிச்சிடுகிறது. அதைப்பார்த்து, இப்போது ஜெயம்ரவியுடன் ஒரு படம், கோவிசந்துடன் ஒரு படம் என மேலும் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் அவருக்கு கிடைத்துள்ளன. அதனால் மீண்டும் கலகலப்பான நயன்தாராவாக அவர் மாறியுள்ளார்.
மேலும், இதுவரை ஆண்களை நம்பி அவர்களிடம் நெருங்கி பழகி தனது இமேஜை கெடுத்துக்கொண்ட நயன்தாரா, இனி அப்படி ஒரே பக்கம் சாயப்போவதில்லையாம். ஆண்-பெண் என இருபாலாரிடமும் சமயோசித நட்பை கடைபிடிக்கப்போகிறாராம். இதனால், முன்பெல்லாம் நயன்தாராவை சுற்றி நடிகர்கள் மட்டுமே இருந்த நிலைமாறி, இப்போது நடிகைகளும் அவர் இருக்கும் இடங்களில் கூட்டமாய் காணப்படுகிறார்கள்.

 15 கோடி சம்பளம் வாங்கும் பிரபுதேவா







ஒரு பாட்டுக்கு ஆடி, நடன நடிகராக இருந்து டான்ஸ் மாஸ்டராக உருவெடுத்தவர் பிரபுதேவா. அதையடுத்து கதாநாயகனாகவும் உயர்ந்தார். ஆனால், மார்க்கெட் டவுனானபோது திடுதிப்பென்று இயக்குனர் அஸ்திரத்தை கையிலெடுத்தார். ஆரம்பத்தில் அவரது இயக்கத்தின் மீது இங்குள்ள ஹீரோக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால், தெலுங்கில் அவர் ஹிட் கொடுத்ததையடுத்து தமிழில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், ஓரிரு படங்களை இயக்கி வந்தநேரம் இந்திப்படவாய்ப்பு கிடைக்க, இப்போது அங்கே முழுநேர இயக்குனராகி விட்டார். இயக்கி வரும் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால், அவரது இயக்கத்தில் நடிக்க மேல்தட்டு ஹீரோக்கள் முண்டியடிக்கிறார்கள். இதனால் பேசப்படும் இயக்குனராகி விட்ட பிரபுதேவாவின் சம்பளமும் இப்போது கிடுகிடுவென்று உயர்ந்து 15 கோடியை எட்டியுள்ளதாம்.
அதனால்தான் தென்னிந்திய படாதிபதிகள் அவரை படம் இயக்க அழைக்கிறபோது, படம் இயக்குவதில் ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், இப்போது எனது சம்பளம் 15 கோடி. அதை உங்களால் தர முடியும் என்றால், நான் ஓ.கே என்கிறாராம். அதைக்கேட்டு ஆடிப்போகும் படாபதிபதிகள், நாம் ஹீரோ, ஹீரோயினி, டைரக்டர் ஆகிய மூன்று பேருக்கும் கொடுக்கிற மொத்த சம்பளத்தை இவர் ஒரே ஆளு கேட்டா எப்படி என்று அடுத்த நிமிடமே போனை கட் பண்ணி விடுகிறார்களாம்.

சண்டை காட்சிகளில் அஜீத் சாகசம் 










“ஆரம்பம் படத்தில், ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும், அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அஜீத். இதனால், பலமுறை விபத்துகளில் சிக்கினார் என்ற போதும், கடைசிவரை, டூப் நடிகரை
பயன்படுத்தாமல், துணிச்சலாக அவர் நடித்ததாக கூறுகின்றனர்.அதிலும், இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள லீ விட்டேக்கர் என்ற ஹாலிவுட் மாஸ்டர், அஜீத்தை, ஒரு சாகசக்காரர் என்கிறார்.
“கோலிவுட்டில் கமலுக்கு அடுத்தபடியாக கடினமாக உழைக்க கூடிய நடிகர் அஜீத் என்றுகூறும் அவர், “ஆரம்பம் படத்தில் நடித்த போது, பல தடவை உடம்பில் காயங்கள் ஏற்பட்ட போதும், அவர் மனம் தளரவில்லை.
மீண்டும் மீண்டும் ரிஸ்க்கான ஆக்ஷன் காட்சிகளில் தில்லாக நடித்தார். அப்போது, என் கண்களுக்கு ஹாலிவுட்டின் டாம் க்ரூஸ் போன்று தெரிந்தார், அஜீத் என்கிறார் லீ விட்டேக்கர்.

அதிரடி இல்‌லை - விஜய் 



ஜில்லா படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படத்திற்கு ‘அதிரடி’ என்று பெயர் வைத்திருப்பதாக வந்துள்ள செய்தியை நடிகர் விஜய் மறுத்துள்ளார். தடைகள் பல கடந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘தலைவா’. இப்படத்தை தொடர்ந்து விஜய், நேசன் இயக்கத்தில், ‘ஜில்லா’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்யுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் நடித்து வருகிறார். இப்படத்தில் மதுரைக்காரராக விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்கு அடுத்து விஜய், மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்திற்கு அதிரடி என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் இதனை விஜய் மறுத்துள்ளார்.
இது குறித்து விஜய் கூறியுள்ளதாவது, ஜில்லா படத்திற்கு பிறகு நான் முருகதாஸ் படத்தில் நடிப்பது உண்மை. ஆனால் படத்தின் தலைப்பு அதிரடி இல்லை. அது வெறும் வதந்தி தான். படத்தின் தலைப்பை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

Tuesday, July 30, 2013

Ajith's film brings a big boost for Vidharth








After serving as an A.D for acclaimed director Vinayan for 14 years, Sajin Verghese is preparing for his directorial debut. His choice of hero is 'Mynaa' fame Vidharth whose career received a remarkable boost since his inclusion in the Ajith-Siva project. The producer Shigajudeen believes that the film will feature a story unlike anything the Tamil audience has experienced so far. He’s also convinced that the film will leave an unforgettable impression on the audience.
 
The team is currently zeroing in on a top heroine for the role of the leading lady and an able technical team is being assembled simultaneously. The cinematography is handled by Muraliraman, a former associate of ace lensman Ravivarman. The film’s dialogues are written by Ravi Varma, and he also doubles up as the Assistant Director of the project. Details of the project’s title and its first schedule are expected to be announced soon.

Vijay Anna to face Powerstar!








Ilayathalapathy Vijay’s Thuppakki did reasonably well in Andhra who took to this slick action entertainer. Vijay looks to be keen to capitalize on the gains of Thuppakki as his latest film Thalaivaa is all set to speak Telugu.

The Telugu dubbed release is titled Anna – ‘Born To Lead’ and is scheduled to come on the same date as the Tamil version, August 9th. Vijay’s Anna is expected to receive a warm welcome in A.P with a strong 250+ screen release but the film is expected to face stiff competition with the release of one of the local favorites, Powerstar Pawan Kalyan’s Attarintiki Daredi, which will be running riot in the same weekend with a confirmed release on August 7th.

Interestingly, Pawan Kalyan and Vijay share a special connection as both actors have remade each other’s films as in the case of Thammudu which became Badri in Tamil and likewise Kushi went to Telugu under the same name. Also Vijay’s Thirupaachi and Love Today were adapted by Pawan Kalyan for his films Annavaram and Suswagatham respectively.